×

விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம் வழங்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்; விதைப்பு முதல் வேளாண்மை தொடர்பான அனைத்துப் பணிகளிலும் மகளிரின் பங்கு மிகமுக்கியமாகும். எனவே, 2024- 2025 ஆம் ஆண்டில், ஆர்வமுள்ள, பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு, தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைப்பின் மூலம், 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்படும்.

தென்னங்கன்றுகள் தோட்டக்கலைத் துறையினால் கொள்முதல் செய்யப்பட்டு, அரசுத் திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும். மேலும், வேளாண் உற்பத்திக்கு விதையே முக்கிய இடுபொருள் என்பதால், பயறு வகைகள் எண்ணெய்வித்துகளில், 100 விதை உற்பத்தித் தொகுப்புகள் அமைப்பதற்கு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதற்குத் தேவையான பயிற்சியும், ஆதார விதைகளும் வேளாண்மைத்துறை வழங்குவதுடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த விதைகளை, உற்பத்தி மானியம் வழங்கி வேளாண்மைத் துறையே கொள்முதல் செய்து, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றார்.

The post விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Minister of Agriculture and Farmers' Welfare ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி